அமெரிக்காவை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!! புள்ளிப்பட்டியலில் முன்னிலை!!
டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் 6-வது போட்டியும், இத்தொடரின் 46-வது போட்டியுமான இன்று நடைபெற்ற போட்டியில் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய அமெரிக்கா அணி தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்து.
எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து மோசமாக விளையாடியது. இதனால், 19.5 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஸ்ஸல் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இதனால், எளிய இலக்கை எடுக்க களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான சாய் ஹோப் மட்டுமே தனி ஆளாக நின்று அமெரிக்கா அணியின் பவுலர்களை பறக்கவிட்டு ஆட்டமிழக்காமல் 39 பந்துக்கு 82* ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 10.5 ஓவர்களில் 130 ரன்களை எடுத்து அபார வெற்றியை ருசித்தது. இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளது.