நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிசிசிஐ தலைவர் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், உட்பட பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இதன் பின் நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அப்பொழுது கங்குலிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிசிசிஐ தலைவர் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.மேலும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கங்குலி நன்றி தெரிவித்தார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…