இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த நியுஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ர்ன்ட் போல்ட் இந்திய அணியை உடைத்து வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமென பேசியுள்ளார்
இதுகுறித்து அவர் கூறியதாவது…
பந்துவீச்சாளர்களான எங்களது பங்களிப்பை நாங்கள் நிச்சயம் சரியாக செய்து கொடுப்போம். இந்திய அணியின் துவக்க வீரர்களின் விக்கெட்டை மிக விரைவாக வீழ்த்தி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சிப்போம்.
முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் நிச்சயம் அது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதல் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்” என்றார்.
இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நாளை காலை 7.30 மணியளவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…