“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!
ஐபிஎல் மெகா ஏலம் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், முகமது ஷமி ஐதராபாத் அணியால் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ரபாடா 10.75 கோடிக்கும், பட்லர் 15.75 கோடிக்கும் குஜராத் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதைப்போல, லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது.
இன்னும் சில வீரர்கள் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர்கள் எந்த அணிக்கு ஏலத்தில் செல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்தது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை இந்த ஆண்டு நடைபெறும் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்.
இந்த சூழலில், அவரை ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வந்த ஷமி அணியின் பந்துவீச்சுக்கு முக்கிய ஒரு தூணாக இருந்தார் என்றே சொல்லலாம்.
எனவே, அவருடைய அசத்தலான பந்துவீச்சின் காரணமாக தான் இந்த முறை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு டிமாண்ட் அதிகமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் 2 கோடிக்கு அவர் பெயர் ஏலத்தில் தொடங்கிய நிலையில், டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் போட்டி போட்டது. இறுதியாக “இவரை நாங்க வச்சுகிறோம்” என்கிற வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ,10 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.