SRHvDC : பேட்டிங் எடுத்துகிறோம்! டாஸ் வென்ற ஹைதராபாத்…அதிரடி காட்டுமா?
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியில் கே.எல்.ராகுல் திரும்பியுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம் என தெரிவித்தார். தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் அணி இந்த முறை பேட்டிங் எடுத்துள்ள காரணத்தால் நிச்சயமாக வழக்கம் போலவே அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் பார்மில் இருப்பதாலும், அவர்களை சமாளிக்கும் அளவுக்கு மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், அக்சர், மோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களும் டெல்லி அணியில் இருப்பதால் போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடும் வீரர்கள்
ஹைதராபாத்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(wk), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ்(c), ஜீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி
டெல்லி
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல்(wk), கேஎல் ராகுல், அக்சர் படேல்(c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்
குழந்தை பிறந்ததன் காரணமாக இதற்கு முன்பு டெல்லி விளையாடிய 2 போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாடாமல் இருந்த நிலையில், இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார். எனவே, ரசிகர்கள் பலரும் அவருடைய பேட்டிங்கை பார்க்க ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.