டி20I: இன்று நடைபெற இருந்த டி20 லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் லீக் போட்டியில் இன்று 30-வது போட்டியாக நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே புளோரிடா உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டியானது மோசமான வானிலை (மழை) காரணமாக தற்போது கைவிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பிளோரிடா மகாணத்திற்கு மழை பொழிவும், மோசமான வானிலை (மழை) நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற வேண்டிய அயர்லாந்து-அமெரிக்கா போட்டியானது டாஸ் கூட போடமுடியாமல் கைவிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியை விளையாடவில்லை என்றாலும் பாகிஸ்தான் அணிக்கு மிகமுக்கியமான போட்டியாகும், இந்த போட்டி நடைபெற்று அதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அடுத்த சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருந்துருக்கும்.
தற்போது, அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றே கூறலாம், மோசமான வானிலையின் (மழை) காரணமாக இரு அணிகளுக்கும் (அயர்லாந்து, அமெரிக்கா) தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டதால் பாகிஸ்தான் அணி மீதம் இருக்கும் ஒரு போட்டியை வெற்றி பெற்றால் கூட புள்ளியின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மேலும், A பிரிவில் இருந்து இந்திய அணியும், அமெரிக்கா அணியும் அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்திய அணி வருகிற ஜூன்-20ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் தனது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியை விளையாடவுள்ளது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …