நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் விளையாடியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.
பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசி விராட் கோலி “மத்தியில் களமிறங்கிய தோனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.மத்தியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைய போட்டியில் தனது ஆட்டத்தை விளையாடினர்.
மேலும் தோனி ஒரு போட்டியில் மோசமாக விளையாடியதால் அனைவரும் அவரை தவறாக பேச தொடங்கிவிட்டனர்.ஆனால் நாங்கள் எப்போதும் தோனிக்கு ஆதரவாக தான் இருப்போம். பல போட்டிகளில் தோனியால் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.தோனியின் அனுபவம் 10-ல் 8 முறை நல்லதாகவே அமைந்து உள்ளது.தோனி எப்போதும் எங்களுக்கு ஆலோசனை வழங்கி வருவார் என கோலி கூறினார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…