RCBvKKR : மங்களகரமா பந்துவீச்சில் ஆரம்பிக்கிறோம்..டாஸ் வென்ற RCB அதிரடி முடிவு!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் விராட் கோலி பெரிய சாதனை படைக்க காத்திருக்கிறார்.

கொல்கத்தா : கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் அணியான கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தொடக்க விழா ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கியது.
அதன்பிறகு தற்போது போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். முன்னதாகவே பீட்ச் சேஸிங் செய்வதற்கு நன்றாக இருக்கும் என தெரியவந்த காரணத்தால் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
வீரர்கள்
கொல்கத்தா
குயின்டன் டி காக்(w), வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(C), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
பெங்களூர்
விராட் கோலி, பிலிப் சால்ட்(w), ரஜத் படிதார்(c), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
விராட் கோலி சாதனை
இந்த போட்டியில் பெங்களூர் அணி ரசிகர்களுடைய கவனம் முழுவதும் அணியின் சிறப்பான ஆட்டக்காரர் விராட் கோலி மீது தான் இருக்கும் என்று சொல்லலாம். அவர்களுக்காகவே விராட் கோலி இன்று சிறப்பாக விளையாடினார் என்றால் சாதனை ஒன்றையும் படைக்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது என்ன சாதனை என்றால் இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 38 ரன்கள் அடித்தார் என்றால் ஐபிஎல் வரலாற்றில் 4 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை படைப்பார்.
ஏற்கனவே, சென்னை, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் விராட் கோலி குவித்திருக்கிறார். எனவே, கொல்கத்தா அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுக்க இன்னும் 38 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இந்த சாதனையை படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.