வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம்! அப்படி நடந்தால் கோலி சிறப்பாக விளையாட  ஆரம்பித்து விடுவார்!

Published by
லீனா

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ஆவார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கடந்த வாரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தபெட்டியில், கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதில் ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து இந்திய கேப்டன் விராட் கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் விராட் கோலியை பகைத்துக் கொண்டால் பெங்களூர் அணியில் இடம் கிடைக்காது என்பதால் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.  இதற்கு பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கிளார்க்கின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், கிளார்க்கின் இந்த சர்ச்சை பேச்சு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆஸ்திரேலியாவில், இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் நல்ல விதமாக நடந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் நான் பார்க்க வில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் பந்து வீச்சில் ஈடுபட்டு அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள பெயின், ‘யார் நட்பு பாராட்டுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம். ஏனெனில் அப்படி நடந்தால் அதன் மூலம் சிறப்பாக விளையாட  ஆரம்பித்து விடுவார் கோலி. அந்த தொடரில் பரபரப்பான தருணங்கள் பல இருந்தன. நாங்கள் யாரும் எதிலும் பின்வாங்கவில்லை. விராட் கோலிக்கு பந்துவீசும் போது யாரும் ஐபிஎல் ஒப்பந்தத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என தெரிவித்திருக்கிறார்.

Published by
லீனா

Recent Posts

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

1 hour ago

CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…

1 hour ago

KKR vs GT : கொல்கத்தாவை அலறவிட்ட குஜராத் கேப்டன் கில்! ஜஸ்ட் மிஸ்-ஆன செஞ்சுரி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…

3 hours ago

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

4 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

5 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

5 hours ago