“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ரோஹித் சர்மா ரகசியமாக பேச நினைத்து அஜித் அகர்கரிடம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma and Agarkar

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இந்திய அணியை அறிவித்தனர். அப்போது, ரோஹித் சர்மா அஜித் அகர்கரிடம் பேசிய விஷயம் ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

அது எதைப்பற்றி என்றால் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு புதிய விதிகளை அறிமுகம் செய்யப்பட்டது குறித்து தான். “முக்கிய விதியாக இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளில் பயணம் செய்து விளையாடும்போது  அந்த பயணத்தில் அவர்கள் தங்களுடைய குடும்பத்தினரைஅழைத்து செல்ல அனுமதி இல்லை” என கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

எனவே, இந்த கட்டுப்பாட்டை தொடர்ந்து கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு சில வீரர்கள் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், இது பற்றி தேர்வுக் குழு கூட்டத்தில் பேசுமாறு கூறுவதாகவும் ரோஹித் சர்மா அஜித் அகர்கரிடம்  பேசினார். மைக் வேலை செய்யவில்லை என்று நினைத்து ரோஹித் சர்மா இந்த விஷயத்தை பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகி கொண்டு இருக்கிறது.

வீரர்கள் இது பற்றி பேசிய காரணத்தால் நாம் கண்டிப்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன் நாம் இதை பற்றி பேச வேண்டும் எனவும் அஜித் அகர்கரிடம் ரோஹித் தெரிவித்தார் என்பதை நாம் வீடியோவில் காணலாம். இதன் மூலம் பிசிசிஐ கொண்டு வந்த விதிமுறைகளில் இந்திய வீரர்கள் சிலருக்கு விருப்பம் இல்லாதது தெரியவந்துள்ளது.

இந்திய அணி : 

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்