இலங்கையை இரண்டாவது சரம் கொண்ட (பி டீம்) இந்திய அணி எதிர்கொள்ளும் என்று கூறிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா,கருத்துக்கு வீரேந்தர் சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா, வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் இலங்கையை இரண்டாவது சரம் கொண்ட இந்திய அணி எதிர்கொள்ளும் என்றும்,தனது வழக்கமான கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்கள் இல்லாத ஒரு இந்திய அணியுடன் ஒரு தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியமானது ஒப்புக்கொண்டதற்காக கோபப்பட்டதாகவும் கூறியிருந்தார்.ஏனென்றால்,விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷாப் பந்த் போன்றவர்கள் இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணியின் ஒரு பகுதியாக இல்லை என்பதே ஆகும்.
மேலும்,இந்தியாவுக்கு எதிரான தொடரை நடத்துவது இலங்கை கிரிக்கெட்டை அவமதிப்பதாகும் என்று கூறினார்.அவரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்,ஒரு பெட்டியில் கூறியதாவது:”எந்த இந்திய அணியையும் ‘பி’ அணி என்று முத்திரை குத்த முடியாது.இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமை இதுதான்,இதற்கு ஒரு அணி மட்டும் போதாது.
மேலும்,அவரின் கருத்து கொஞ்சம் முரட்டுத்தனமாக உள்ளது.இது ஒரு ‘பி’ அணி என்று அவர் நினைத்திருக்கலாம், ஆனால் இந்திய கிரிக்கெட்டின் வலிமை அத்தகையது அல்ல.என்னவென்றால் நீங்கள் எந்த அணியையும் அனுப்ப முடியும்,அது ஒரு ‘பி’ அணியாக இருக்காது.இதுவே ஐ.பி.எல் இன் நன்மை, எங்களுக்கு அளவுக்கு அதிகமான திறமைகள் உள்ளன,அதனை ஒரே அணியில் குவிக்க முடியாது.மேலும்,இந்த அணியில் அனைவருக்கும் சமமான திறமையுள்ளது.
இந்திய அணி இலங்கைக்குச் சென்றிருக்காவிட்டால், எஸ்.எல்.சி நிதி மற்றும் நிதிசார்ந்த உதவிகளை இழந்திருக்கும்:
இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் உள்ள வீரர்கள் இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினால், தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அணியை ஒரு சில போட்டிகளில் கூட தோற்கடிக்க முடியும்.எனவே,இது ஒரு ‘பி’ குழு என்று நான் நினைக்கவில்லை.
இந்திய அணியை அனுப்பியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம்(எஸ்.எல்.சி ),இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.ஏனென்றால், இலங்கைக்கு எதிராக விளையாட இந்திய தரப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால், எஸ்.எல்.சி நிறைய நிதி மற்றும் நிதி சார்ந்த உதவிகளை இழந்திருக்கும்”,என்று தெரிவித்தார்.
அதற்கேற்ப,நேற்று ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…