ஐபிஎல் 2024 : இன்றைய பகல் நேர ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார்.
இன்றைய ஐபிஎல் தொடரின் பகல் ஆட்டமாக மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணியை மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை மும்பை அணி பதித்துள்ளது.
மும்பை அணியின் இந்த முதல் வெற்றிக்கு பிறகு அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா வெற்றி பெற்றதை குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இந்த முதல் வெற்றியை அனுபவிப்பதற்கு எனக்கு அதிக ஆசையாக இருந்தது. அது இப்போது கிடைத்துள்ளது மேலும், இன்று எங்கள் அணியின் விளையாட்டானது சிறப்பாக இருந்தது.
இன்று எங்கள் யுக்திகளை நாங்கள் அவ்வாறு செயல்படுத்தினோம் என்பதில் நான் பெருமைப்படுகறேன். இனி வருகிற போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்கள் அணியின் மாற்றங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் முக்கியமான 12 வீரர்களையும் நாங்கள் உற்சாகமாகவும் தயாராகவும் வைத்திருக்கிறோம். ஆரம்ப ஓவர்களில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றது எங்களுக்கு நன்றாக அமைத்தது.
அணிக்கு தேவைப்படும் நேரம் தேவையான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ரோமாரியோ ஷெப்பர்டின் இன்னிங்ஸ் முக்கியமானது, அவரது ஆட்டம் இன்றைய போட்டியில் பேசும் வகையில் அமைந்தது. அதே போல இந்த போட்டியில் எனது பந்துவீச்சு அவசியமில்லை, மேலும், தேவையான நேரத்தில் நான் பந்து வீசுவேன்”, என்று போட்டிக்கு பிறகு அணியின் வெற்றியை குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…