தோனியுடன் தோற்றது குறித்து எங்களுக்கு கவலையில்லை.. மகிழ்ச்சிதான்.! கேப்டன் பாண்டியா ஓபன் டாக்.!

Hardik Pandya and dhoni

நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும், எனக்கு தெரிந்த நல்ல மனிதர்களில் சிறந்தவர் தோனி தான் என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சென்னை அணி அசத்தியது.

த்ரில் வெற்றி:

பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி செய்தார் ரவீந்திர ஜடேஜா. அகமதாபாத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.

JADDU
[Image Source : Twitter/IPL]

பின்னர் களமிறங்கிய சென்னை அணி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை காரணமாக இறுதிப்போட்டியில் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழை நின்ற பிறகு நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது.

சென்னை அசத்தல்:

DHONI LIFT JADDU
[Image Source : Twitter/IPL]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிக்ஸர் மழை பொழிந்ததால் உற்சாகம் அடைந்தனர். சென்னை அணியின் கான்வே, துபே, ரஹானே, ராயுடு தலா 2 சிக்ஸர்கள் மற்றும் ருதுராஜ், ஜடேஜா தலா 1 சிக்ஸர்கள் பறக்கவிட்டனர். கடைசி 2 பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற செய்தார் ஜடேஜா. எனவே, குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை அசத்தியது.

5வது முறை சாம்பியன்:

chennai champion
[Image Source : Twitter/IPL]

இதன் மூலம் 2010, 2011, 2018, 2021 ஆண்டுகளை தொடர்ந்து இந்தாண்டும் 5வது முறையாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தருணம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உணர்வுடன் கொண்டாடப்பட்டது. அதுவும், இந்தாண்டு  சென்னை அணி எங்கு சென்றாலும், மஞ்சள் படை சூழ்ந்தது. அந்தவகையில், இறுதிப்போட்டி குஜராத்தில் நடைபெற்றாலும், அங்கையும் மஞ்சள் கடல் திரண்டது. இதற்கு தோனியே காரணம்.

ஹர்திக் பாண்டியா:

H PANDYA
[Image Source : Twitter/IPL]

இப்போட்டிக்கு பின்னர் பேசிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, எங்களது அணியில் நாங்கள் ஒரு குழுவாக நிறைய பாக்ஸுகளை டிக் செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். நாங்கள் மிகுந்த மனதுடன் விளையாடுகிறோம், நாங்கள் தொடர்ந்து போராடிய விதத்தில் பெருமைப்படுகிறோம். நான் சாக்கு சொல்லப் போவதில்லை, சிஎஸ்கே சிறப்பாக விளையாடியது.

வெற்றிக்கு தகுதியானவர் தோனி:

நாங்கள் நன்றாக பேட் செய்தோம், சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடினார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களிடமிருந்து சிறந்ததை பெறுவதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம். எனவே, நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம், எங்களால் முடிந்த வரை எல்லாவற்றையும் கொடுத்தோம். எங்களுடைய அணியை நினைத்து பெருமைகொள்கிறேன் என தெரிவித்தார். இதன்பின் தோனி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, இந்த வெற்றிக்கு தகுதியானவர் தோனி.

PANDYA DHONI
[Image Source : Twitter/IPL]

நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் சந்தித்ததில் மிகவும் நல்லவர், இன்று கடவுள் அவருக்கு உரியதை வழங்கினார். நான் தோல்வி அடைய வேண்டும் என்றால் தோனியிடம் தான் தோல்வி அடைவேன், நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும், எனக்கு தெரிந்த நல்ல மனிதர்களில் சிறந்தவர் தோனி தான். விதி இதை அவருக்காக  எழுதியுள்ளது. இந்தாள் தோனிக்கானது, அவருக்கு எதிராக தோல்வியடைந்ததை நினைத்து கவலைப்படமாட்டேன். சென்னை அணிக்கு எனது வாழ்த்துக்கள் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

குஜராத் அணி மகிழ்ச்சி:

YELLOW FANS
[Image Source : Twitter/IPL]

இதனிடையே, போட்டிக்கு பிறகு குஜராத் அணி தனது ட்விட்டர் பக்க பதிவில், தல, எங்களுக்கு தெரியும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் நாங்கள் ஒரு ஜீனியஸுக்கு எதிராக மட்டும் அல்ல மஞ்சள் கடலுக்கு எதிராக போராட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த இரவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடியது தான், ஆனாலும், ஐபிஎல் கோப்பையை நீங்கள் வைத்திருப்பதை காணும்போது எங்களுக்குள் இருக்கும் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கிறது என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்