ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார்.
நேற்று டெல்லி, கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் களமிறங்கி அதிரடி காட்டியது. அந்த அணியின் கூட்டு முயற்சியில், குறிப்பாக சுனில் நரேன் மற்றும் ரசல்லின் அதிரடியால் அந்த அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை கொல்கத்தா அணி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் வெற்றி பெற்றதை குறித்து பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “நாங்கள் தொடக்கத்தில் 210-220 ரன்களை இலக்காக தீர்மானித்து தான் விளையாடினோம் உண்மையில் நாங்கள் நிர்ணயித்த இந்த ஸ்கோர் எங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தது. அதிலும், சுனில் நரேனின் பங்கு எங்களுக்கு ஒரு வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது. மேலும், இவரது இந்த ஆக்ரோஷமான விளையாட்டு எப்போதும் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இன்று, அவர் ஆரம்பம் முதலே முற்றிலும் பயமில்லாமல் விளையாடினார்.
அதிலும், அவரது விளையாட்டு பார்ப்பது ஒரு விருந்தாகும். அதன் பிறகு போட்டியில் எங்களுக்கு விக்கெட் தேவைபட்ட போது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டு விக்கெட்டுகள் எடுத்து ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க அருமையாக இருக்கிறது. குறிப்பாக வைபவ் அரோரா இந்த போட்டியில் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து தனித்து நின்றார், அவர் உண்மையிலேயே அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். இதே போல வெற்றியை நாங்கள் மீண்டும் தொடருவோம்”, என்று போட்டி முடிந்த பிறகு வெற்றியை குறித்து ஷ்ரேயஸ் ஐயர் பேசி இருந்தார்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…