நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

Published by
அகில் R

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. லீக் ஆட்டம் முடிவடையம் கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் விளையாடிய இரு அணிகளுக்கும் இதுவே கடைசி போட்டியாகவும் இருந்தது. இதனால் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

இதனால் லக்னோ அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது, அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் 41 பந்துக்கு 55 ரன்கள் என ஒரு பக்கம் பொறுமையாக விளையாட மறுபக்கம் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் சிறப்பாக விளையாடினார்கள். அதிலும் நிக்கோலஸ் பூரன் மிக அதிரடியாக விளையாடி 29 பந்துக்கு 75 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியில் லக்னோ அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. இதனால், மும்பை அணி 217 என்ற இமாலய இலக்கை எடுப்பதற்காக களமிறங்கியது.

ஃபார்ம் போய்விட்டது என விமர்சனத்திற்கு உள்ளாகிய ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் அதிரடி காட்டி விளையாடினார். அவர் 38  பந்துக்கு 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை. கடைசியாக களமிறங்கிய நமன் திர் மட்டும் அதிரடியாக விளையாடினார். இதனால் இறுதியில் மும்பை அணி 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டி முடிந்த மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியின் காரணங்களை பற்றி பேசி இருந்தார். அவர் கூறுகையில், “இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இந்த சீசனில் நாங்கள் ஒரு நல்ல தரமான கிரிக்கெட்டை விளையாடவில்லை, மேலும், அது எங்களுக்கு விலை உயர்ந்ததாக தெரிகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் நல்ல நாட்களும் உண்டு கேட்ட நாட்களும் உண்டு. ஆனால் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர்களாக, நாம் எப்போதும் வெற்றிகளை நோக்கி கால்களை முன்னோக்கி வைக்க வேண்டும்.

முயற்சிகளை இங்கு நான் பிரச்சினை என்று நினைக்கவில்லை, ஆனால் ஒரு அணியாக எங்களால் ஒரு தரமான கிரிக்கெட்டை விளையாட முடியவில்லை என்று நான் நினைக்கிறன். போட்டியின் முடிவுகள் வரும் போது தான் அதை பிரதிபலிக்கின்றன. இந்த முழு ஐபிஎல் தொடரும் நாங்கள் நினைத்தது போல செல்லவில்லை. இந்த தொடரை கடந்து அடுத்த சீசனுக்காக காத்திருப்போம்”, என போட்டி முடிந்த பிறகு தவறுகளை ஒப்புக்கொண்டு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

மத்திய பட்ஜெட் 2025 :  எப்போது தாக்கல்? எதிர்பார்ப்புகள் என்ன?

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…

10 minutes ago

கனடா, மெக்சிகோவுக்கு 25%., சீனாவுக்கு 10%! அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…

39 minutes ago

“தவெகவும் விசிகவும் ஒரே கொள்கைகளை தான் பேசுகிறது!” திருமாவளவன் பேட்டி!

சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…

1 hour ago

நான்காவது டி20 யில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா தொடரை கைப்பற்றியது !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…

9 hours ago

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா – விசிக தலைவர் திருமா ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…

11 hours ago

பாண்டியா – சிவம் துபே ருத்ர தாண்டவம்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி! 182 ரன்கள் இலக்கு!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

11 hours ago