ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை – தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் ருதுராஜ்

Ruturaj Gaikwad

ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை என்று தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் csk கேப்டன் ருதுராஜ் பேசியுள்ளார்.

நேற்றைய தினம் சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது.

விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து சென்னை அணி தோல்வியடைந்தது. முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த டெல்லி அணி, தற்போது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், போட்டி முடிந்த பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தோல்வி குறித்து பேசுகையில், “பவர் பிளேவில் சொதப்பியது தான் தோல்விக்கு முக்கிய காரணம். 2வது இன்னிங்ஸில், பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. மேலும், ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். பவர்ப்ளேவில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

கடைசி நான்கு ஓவர்களில் எங்களுக்கு 72 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த போது தோனி வெறித்தனமாக களத்தில் செயல்பட்டார். அதுவும் குறிப்பாக இறுதி ஓவரில்நாம் அந்த கிளாசிக் விண்டேஜ் ஹிட்டிங்கை பார்க்க முடிந்தது. 2 வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம் தான். அதனால் கவலைப்பட தேவையில்லை” என போட்டிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்