அந்த கேட்ச்களை விடாமலிருந்தால் ஜெயித்திருக்கலாம்- புவனேஸ்வர் குமார்
இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் அந்த கேட்ச்களை விடாமலிருந்தால் ஜெயித்திருக்கலாம் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.
டி-20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பியது.
சூரியகுமார் யாதவ் ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் இந்தியா 133 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் சுமாராகவே இருந்தது, சில ரன் அவுட் வாய்ப்புகள் மற்றும் கேட்ச்கள் என இந்திய அணி கோட்டை விட்டது. இந்த நிலையில் புவனேஸ்வர் குமார், கேட்ச்களை நாங்கள் விடாமல் இருந்திருந்தால் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்போம் என கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, அர்ஷ்தீப் சிங்கின் 2 விக்கெட்கள் தான் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசினார்.