எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மகி என்ற வார்த்தை இருப்பது எங்களுக்கு பெருமை..! – ஆனந்த் மஹித்ந்ரா ட்வீட்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் அதிரடியான ஆட்டம் குறித்து ஆனந்த் மகேந்திரா ட்வீட்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – உத்தப்பா களமிறங்கினார்கள்.
கடைசியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முன்னாள் கேப்டன் தோனி 6,4,2, மற்றும் 4 ரன்களை அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். தோனியின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய தொழிலதிபரும், மகிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மகி என்ற வார்த்தை இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். MSDhoni அற்புதமான முடிவு’ என பதிவிட்டுள்ளார்.
Well, all I can say is that I’m glad we have the letters MAHI in Mahi-ndra! ???????????? #MSDhoni Awesome finish. https://t.co/FNv6u89zRA
— anand mahindra (@anandmahindra) April 21, 2022