ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையில் இந்தியா விளையாடும் போட்டிகள்…
ஐசிசி 2023 க்கான ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் அகமதாபாத் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இறுதிப்போட்டியும் நவம்பர் 19இல் இதே அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இதில் 10 அணிகளும் மற்ற 9 அணிகளுடனும் மோதும் போட்டிகளின் முடிவில் 4 இடங்களைப்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா சூப்பர் லீக் சுற்றில் 9 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியுடன் சென்னை சேப்பாக்கத்தில் வரும் அக்டோபர் 8 இல் மோதுகிறது.
இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 11 இல் டெல்லியிலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15 இல் அகமதாபாத்திலும், அடுத்த போட்டியில் அக்டோபர் 19 இல் வங்கதேசத்துக்கு எதிராக புனேவிலும் இந்தியா விளையாடுகிறது.
இந்திய அணியின் 5-வது போட்டி அக்டோபர் 22 இல் நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலாவிலும், 6-வது போட்டி அக்டோபர் 29 இல் லக்னோவில் இங்கிலாந்துக்கு எதிராகவும், 7-வது போட்டி நவம்பர் 2 இல் மும்பையிலும் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் Q2அணியுடனும், 8-வது போட்டி நவம்பர் 5 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவிலும், 9-வது போட்டி நவம்பர் 11இல் பெங்களுருவில் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் Q1 அணியுடனும் நடைபெறுகிறது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…