WC2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் விலை எவ்வளவு, முன்பதிவு பற்றிய தகவல்கள் இங்கே…
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்…
உலகக்கோப்பை 2023:
மிகவும் எதிர்பார்த்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 48 போட்டிகள் இந்தியாவின் 10 நகர மைதானங்களில் நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கி நவம்பர் 19இல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
அக்டோபர் 5 இல் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத்தின் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 இல் மோதுகிறது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பாகிஸ்தானுடனான போட்டி அக்டோபர் 15இல் குஜராத்தில் நடைபெறுகிறது.
டிக்கெட் எப்படி பெறலாம்:
உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்களை ஐசிசி கிரிக்கெட் (ICC Cricket Worldcup) உலகக்கோப்பையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் நாம் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் எனவும், இது குறித்து விரைவில் டிக்கெட் விற்பனை ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையின் இணையதளத்தில் திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் விற்பனை:
இது தவிர டிக்கெட்கள் புக் மை ஷோ, பேடிஎம்(Paytm), போன்ற ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்யப்படும் எனவும், பெரும்பாலும் டிக்கெட்கள் நேரடி கவுண்டர்களை விட ஆன்லைனில் தான் விற்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.10,000 வரை மைதானங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.