#WC2023 : உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை.! இந்திய அணியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்…
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் முதல் போட்டி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே குஜராத் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19இல் இதே அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவின் முதல் போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. மிக முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தானுடன் அக்டோபர் 15 இல் குஜராத் அகமதாபாத் ஸ்டேடியத்தில் மோதுகிறது.
உலகக்கோப்பை நடைபெறும் மைதானங்களாக ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 ஊர்களின் மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் பயிற்சி ஆட்டங்கள், ஹைதராபாத், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.