ஐபிஎல்2024 : ‘ரியான் பராக்கை பார்த்து கற்று கொள்ளுங்கள் ..’ – முன்னாள் கிரிக்கெட்டர் இர்பான் பதான் புகழாரம்
ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக்கை முன்னாள் இந்திய கிரிக்கெட் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதன் புகழ்ந்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 9-துவது போட்டியாக நடைபெற்ற ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ராஜஸ்தான் அணியின் இளம் ஆள்-ரவுண்டர் வீரரான ரியான் பராகின் அதிரடி ஆட்டமே ஆகும்.
இவர் நேற்று நடைபெற்ற டெல்லி அணியுடனான போட்டியில் 45 பந்துகளில் 84* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த டெல்லி அணியும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் ஆட்டத்தின் போக்கை மாற்றி ஆட்டநாயகன் விருதும் ரியான் பராக் பெற்றிருந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர், அதே போல இந்திய அணியின் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது X தளத்தில் ரியான் பராகை புகழ்ந்து பதிவிட்டுருந்தார். அவர் இரண்டு பதிவுகளை அடுத்தடுத்து பதிவிட்டு இருந்தார். அதில் முதல் பதிவில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில், ரியான் பராக் இந்தியாவுக்காக விளையாடுவார் ..” என்று முன்கூட்டிய கணித்தது போல பதிவிட்டிருந்தார்.
மேலும், அரை மணி நேர இடைவெளியில் அடுத்த பதிவை அவர் பதிவிட்டார். அந்த பதிவில், “உங்கள் நலனுக்காக சொல்கிறேன் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டை ஒருபோதும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ரியான் பராகை பார்த்து கற்று கொள்ளுங்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் டன் கணக்கில் ரன் குவித்து அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்”, என்று கிரிக்கெட்டை எதிர்காலமாக கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இது போல பதிவிட்டு இருந்தார்.
In the next two years Riyan Parag is playing for India…
— Irfan Pathan (@IrfanPathan) March 28, 2024
Don’t ever take Indian domestic cricket lightly, it’s for your own good. Look at Riyan Parag. He is performing well in the IPL straightaway cos he made tons of runs there.
— Irfan Pathan (@IrfanPathan) March 28, 2024