“அப்பாவின் பணத்தை வீணாக்குகிறார்”- விமர்சனம் செய்தவருக்கு சாரா டெண்டுல்கர் அதிரடி பதில்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், இன்ஸ்டாகிராமில் தனது விமர்சனம் செய்தவருக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளது. அவரின் மகள் சாரா டெண்டுல்கருக்கு 23 வயதாகிறது. லண்டனில் மருத்துவம் படித்த அவர், தற்பொழுது மும்பையில் உள்ளார். சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிடுவார்.
அவரை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் (12 லட்சதிற்கும் அதிகாமோர்) பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவர் காபி ஷாப்பில் குடித்த காபியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டார். அதனை பார்த்த பெண் ஒருவர், “அப்பாவின் பணத்தை வீணாக செலவு செய்கிறார்” என விமர்சித்தார். அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பத்தியில் நக்கலாக பதிலளித்த சாரா, “நான் காபிக்காக செலவிடப்பட்ட பணம் சரியானதுதான். வீணாக செலவியவில்லை” என நக்கலாக பதிலளித்துள்ளார்.