வீணானது கோலி தந்திரம்…5 பந்தில் 2 DRS இழந்த இந்தியா..!

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த போட்டியில் இந்தியா அணி தடுமாறி வருகிறது. கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து வலுவான ஸ்கோரை நோக்கி நகர்கிறது. இரண்டாவது நாளிலும் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை தொடங்கியது.
ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையேயான கூட்டணியை முறிக்க கோலி பயன்படுத்திய தந்திரம் வீணானது. கேப்டன் கோலி இரண்டு டி.ஆர்.எஸ் எடுத்தார். ஆனால், டி.ஆர்.எஸ் இரண்டு முறையும் இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக முடிவு வந்தது. முதல் டிஆர்எஸ் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓவரிலும், இரண்டாவது முதல் டிஆர்எஸ் ஷாபாஸ் ஓவரிலும் இந்திய அணி இழந்தது. அஸ்வின் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் கையுறையில் பட்டது. உடனே அஸ்வின் எல்.பி.டபிள்யூ கேட்க, பின்னர் கோலி டி.ஆர்.எஸ் எடுக்க முடிவு செய்தார்.
அப்போது, பந்து ஸ்டோக்ஸின் கையுறை பட்டு செல்வது சென்றது. இதனால், மூன்றாவது நடுவரின் முடிவு அவுட் கொடுக்கவில்லை, முதல் டி.ஆர்.எஸ்ஸை கோலி இழந்தார். இதன் பின்னர் ஷாபாஸ் நதீம் அடுத்த ஓவர் வீசினர். அப்போது, பென் ஸ்டோக்ஸின் இடது காலில் பந்து பட்டது. உடனே ஷாபாஸ் நதீம் அவுட்டிற்கு முறையிட்டனர். ஆனால், நடுவர் அதை அவுட் கொடுக்கவில்லை, அதன் பின்னர், கேப்டன் கோலி டி.ஆர்.எஸ் எடுக்க முடிவு செய்தார்.
அப்போது பந்து ஸ்டம்புகளுக்கு வெளியே சென்றது. இதனால் மற்றொரு டி.ஆர்.எஸ்ஸை இந்தியா இழந்தது. நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சிபிலியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது.இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் தனது 100 வது டெஸ்டில் 171* ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து 82 ரன் எடுத்து வெளியேறியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், நதீம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.