ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 38-வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணியில் முதலில் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் முதல் ஓவரின் கடைசி பந்தில் குசல் பெரேரா 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து குசல் மெண்டிஸ் களமிறக்க பதும் நிஸ்ஸங்க பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி நல்லத் தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.
மறுபுறம் விளையாடி வந்த குசல் மெண்டிஸ் ஓரளவு ரன் எடுத்து 19 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த 2 ஓவரில் பதும் நிஸ்ஸங்கவும் அரைசதம் பூர்த்தி செய்யாமல் 41 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா இருவரும் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் பொறுப்பாக விளையாடி வந்த சதீர சமரவிக்ரமா அரைசதத்தைத் தவறவிட்டு 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதற்கிடையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் “டைம் அவுட்” முறையில் வெளியேறினார். இந்த அவுட் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது. அடுத்து களமிறங்கிய தனஞ்சய டி சில்வா 34, மகேஷ் தீக்ஷனா 22 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். மறுபுறம் விளையாடி வந்த சரித் அசலங்கா சிறப்பாக விளையாடி சதமடித்து விளாசினார்.
146 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் .. கடுப்பான ஏஞ்சலோ மேத்யூஸ்..!
அடுத்த சில நிமிடங்களில் சரித் அசலங்கா 105 பந்திற்கு 6 பவுண்டரி, 5 சிக்ஸர் என மொத்தம் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணியில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றஇலக்குடன் பங்களாதேஷ் அணியின் தொடங்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். 3-வது ஓவரில் தன்சித் ஹசன் 9 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் நஜ்மல் உசேன் களமிறங்க களத்தில் இருந்த லிட்டன் தாஸ் நிதானமாக விளையாடி வந்த போது 23 ரன்னில் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் மறுபுறம் விளையாடி நஜ்மல் உசேன் உடன் ஜோடி சேர்த்தார்.
இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசத்தை பூர்த்தி செய்தனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். சிறப்பாக விளையாடி கேப்டன் ஷகிப் அல் ஹசன் 82 ரன்னில் அசலங்காவிடம் கேட்சை கொடுத்து நடையை கட்டினார். இருப்பினும் எதிர்முனையில் விளையாடி வந்த நஜ்மல் உசேன் சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில் 90 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவர்கள் கூட்டணியில் 169 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்து களம் கண்ட மஹ்மூதுல்லா, முஷாப்குர் ரஹீம் வந்த வேகத்தில் ஓரளவு ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்படி மஹ்மூதுல்லா 22, முஷாப்குர் ரஹீம் 10 ரன்கள் சேர்த்தனர் இறுதியாக பங்களாதேஷ் அணி 41.1 ஓவரில் 7 விக்கெட் இழந்து 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டையும், ஏஞ்சல் மேத்யூஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…