தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. இந்திய அணியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் சிறப்பாக செயல்பட்டார். அவரு பேட்டிகளும் அசத்தினார்.
இதன்பின் ஒருநாள் போட்டியில் தீபக் சாஹர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் தீபக் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டிக்குப் பிறகு சாஹருக்கு முதுகில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் இடம்பெறவில்லை. அவர் இப்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) வரவழைக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவக் குழுவால் அவர் கண்காணிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகினார். இவருக்கு பதிலாக முஹமது சமி, சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இதில் குறிப்பாக, உலக கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் தீபக் சாஹர் உள்ளார். இந்த நிலையில், அவருக்கும் முதுகு பிரச்சனை (stiffness in back) ஏற்பட்டுள்ளதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியை ராஞ்சியில் நாளை விளையாடும் மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியை அக்,11 அன்று டெல்லியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…