நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியத. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து.
அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது, சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த சூப்பர் ஓவரின் போது, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, அதன்படி அதிரடி ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வார்னர், வில்லியம்சன் இருவரும் களமிறங்கினார்கள்.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” ஜானி பேர்ஸ்டோ சூப்பர் ஓவரின் போது டாய்லெட்ல இருந்தாரா..?? 18 பந்துகளில் 38 ரன் அடித்த அவரை கண்டிப்பாக களமிறக்கியிருக்க வேண்டும். அவரை ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கவில்லை.? ஹைதராபாத் அணி நல்லமுறையில்தான் விளையாடியது. ஆனால் சூப்பர் ஓவரில் சரியான முடிவு எடுக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…