முடிவுக்கு வந்த வார்னரின் வாழ்நாள் தடை ! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் விரர் டேவிட் வார்னருக்கு கேப்டனாக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
சிட்னி : கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன் தான் டேவிட் வார்னர். அந்த அளவிற்கு வார்னரின் விளையாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும், ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவர் மீது வைத்த குற்றத்திற்காக இன்று ஆஜராகி வருத்தம் தெரிவித்திருந்தார். இதனால், அவரது வருத்தத்தை ஏற்றுக் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவர் மீது இருந்த அந்த தடையை நீக்கியுள்ளது.
இதனால், வார்னர் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டில், தென்னாபிரிக்க அணியுடனான ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த பந்தின் மீது மணல் தாள் வைத்து சேதப்படுத்தியதாக வார்னர் மீதும் சக வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீதும் குற்றசாட்டு எழுந்தது.
இந்த குற்றம் உறுதியானதால், இருவருக்கும் கிரிக்கெட் விளையாட ஒரு வருடம் தடையும், உள்ளூர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பேட்டிங்கில் மட்டும் வார்னர் சிறப்பாக விளையாடி வந்தார்.
இந்த நிலையில், தனது குற்றத்திற்காக வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் மீது இருந்த வாழ்நாள் கேப்டனாகும் தடையை நீக்கி இருக்கிறது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். இதனால், அவர் விரைவில் ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஏதேனும் ஒரு அணியைத் தலைமை தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.