மைதானத்தில் குத்தாட்டம் போட்ட வார்னர்; கடுப்பான ரசிகர்கள்..!
பாகிஸ்தான் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. பாகிஸ்தான் -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் வீரர்கள் தங்களது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். பின்னர், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 459 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.
இரு அணிகளுக்கும் முதல் இன்னிங்ஸ் முடியவே 5 வது நாள் காலை ஆகிவிட்டது. இதன் பிறகு பாகிஸ்தான் 2-வது இன்னிங்க்ஸை தொடங்கி இன்றைய கடைசிநாள் ஆட்டத்தில் 252 ரன்கள் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் வார்னர் மைதானத்தில் நடனமாடினார். இதனை பார்த்து சிலர் ரசித்தனர். சிலர் வார்னரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலி அணி ஜாம்பவான் வார்னே உயிரிழந்து 3 நாட்கள் தான் ஆன நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். அப்படி உள்ளபோது வார்னர் குத்தாட்டம் போடுவது நல்லதா..? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
The crowd and the camera love @davidwarner31 ????????#BoysReadyHain I #PAKvAUS pic.twitter.com/UWQYAjTLsk
— Pakistan Cricket (@TheRealPCB) March 8, 2022