மனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..!
தனது மனைவியுடன் நடனம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ், அவரின் ஆர்வத்தை அடக்கியது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
மேலும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகுபலி பிரபாஸ் புகைப்படத்தையும் அவரது புகைப்படத்தையும் பாகுபலி பிரபாஸ் போல் இருந்த அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது , அதை போல் தற்பொழுது தனது மனைவியுடன் நடனம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram