ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களின் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் 28 பந்துகள் விளையாடி 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
மற்றோரு தொடக்க வீரராக களமிறங்கியிருந்த டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி வந்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் டெஸ்டிலும் 6 ரன்களில் சதத்தை தவறவிட்ட வார்னர், இப்போட்டியில் சதம் அடிப்பார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து சத்தத்தை தவறவிட்ட வார்னர், அவுட்டாகி சோகத்துடன் வெளியேறினாலும் மைதானத்தில் இருந்த சிறுவனுக்கு தனது கிளவுஸை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார். இறுதியாக ஆஷஸ் 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் முடிவில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து, 221 ரன்கள் எடுத்துள்ளது.
மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் லாபுசாக்னே 95 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 18 எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி பந்துவீச்சை பொறுத்தளவில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…