காயத்தில் இருந்து குணமடைந்து மூன்றாம் டெஸ்ட் போட்டியில் கால்பதிக்கவுள்ள “வார்னர்”
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில், இந்தியா அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில், டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. மேலும், இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து முன்றாம் டெஸ்ட் போட்டி, ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2 ஆம் ஒருநாள் போட்டியின்போது வார்னருக்கு காயம் ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்தால் மைதானத்திலே சுருண்டு, நடக்க முடியாமல் துடித்த வார்னரை மைதானத்திற்கு வெளியே அழைத்து செல்லப்பட்டார். மேலும், இந்த காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகுவதாக அறிவித்தார்.
அதன்பின் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தற்பொழுது ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் வார்னருக்கு காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்த நிலையில், இந்தியா அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிரடி வீரர் ரோஹித் சர்மாவும் விளையாடவுள்ளது, குறிப்பிடத்தக்கது.