இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளாயாடும் பொது ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரரான வார்னருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், மூன்றாம் போட்டியில் ஆறுதல் வெற்றியை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 2 ஆம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் போட்டியின் பாதியில் வெளியேறினார். நான்காவது ஓவரில், ஷிகர் தவான் பந்தை மிட்-ஆஃப் சைடு நோக்கி அடிக்க பந்தை வார்னர் குறுக்கே வந்து பந்தைத் தடுக்க ஒரு டைவ் அடித்தார். அவர் இரண்டாவது முறையாக உருட்டும்போது காயம் ஏற்பட்டது.
இதனால் வார்னர் களத்திலேயே சுருண்டு விழுந்து, நடக்க முடியாமல் துடித்தார். பின்னர் வார்னரை மைதானத்திற்கு வெளியே அழைத்து செல்லப்பட்டார். இந்த காயம் காரணமாக ஒருநாள், டி-20 தொடரில் இருந்து வார்னர் விலகுவதாக அறிவித்தார். அதன்பின் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…