ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 22-வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணி துபாய் சர்வதேச கிரிக்கெட் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா, பாத்தும் நிஸ்ஸங்க இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் பாத்தும் நிஸ்ஸங்க 7 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து இறங்கிய அசலங்கா, குசல் பெரேரா உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இருவரும் தலா 35 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அடுத்து மத்தியில் இறங்கிய ராஜபக்சே 33 ரன் எடுத்து அடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுத்து வெளியேற இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஜம்பா, கம்மின்ஸ், மிட்டல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 155 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.அதிலும் குறிப்பாக டேவிட் வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். நிதானமாக விளையாடி வந்த ஆரோன் பிஞ்ச் 37 ரன்னில் போல்டானார்.
அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் அரை சதம் விளாசி 65 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி அடங்கும் பின்னர் அடுத்து களம் கண்ட ஸ்மித் சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற இறுதியாக ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஸ்மித் 28 * ரன் எடுத்து நின்றார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…