பாகிஸ்தான் அணிக்கு புதிய தேர்வுக் குழுத் தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்..!
புதிய கேப்டன்கள் அறிவிப்பு:
உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணி கடைசியாக 2011 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு சென்றது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரவில்லை.
இம்முறை அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டன் பதவி ஷான் மசூத்துக்கும் வழங்கப்பட்டது.
புதிய தலைமை தேர்வாளர் அறிவிப்பு:
இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் வேக பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வஹாப் ரியாஸ் கிரிக்கெட் வாழ்க்கை:
வஹாப் ரியாஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 1114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 136 முதல் தர போட்டிகளில் 441 விக்கெட்டுகளையும், 191 லிஸ்ட் ஏ போட்டிகளில் 260 விக்கெட்டுகளையும், 348 டி20 போட்டிகளில் 413 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். வஹாப் ரியாஸ் 27 டெஸ்ட் போட்டிகளில் 83 விக்கெட்டுகளையும், 93 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 120 விக்கெட்டுகளையும் , 36 சர்வதேச டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவர் 2008 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார். அதே சமயம் 2020 இல் இந்த அணிக்காக தனது கடைசி போட்டியில் விளையாடினார்.
38 வயதில் அவருக்கு இந்த பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. பஹவ் ரியாஸ் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர், வலது கையால் பேட்டிங் செய்தார்.
Former Pakistan fast bowler Wahab Riaz has been appointed as the chief selector of the national men’s selection committee.
Read more ➡️ https://t.co/3uhDwHUhIB pic.twitter.com/567fXkwQOa
— Pakistan Cricket (@TheRealPCB) November 17, 2023