இன்றைய நான்காவது டி .என்.பி .எல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் Vs வி.பி. காஞ்சி வீரன்ஸ் மோதி வருகிறது.இப்போட்டி திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
லைகா கோவை கிங்ஸ் வீரர்கள்:
அபிநவ் முகுந்த் (கேப்டன் ), பி அனிருத் சீதா ராம், அக்கில் ஸ்ரீநாத், எஸ் மணிகண்டன், பிரடோஷ் ரஞ்சன் பால் (விக்கெட் கீப்பர்), மலோலன் ரங்கராஜன், ஷாருக் கான், எஸ் அஜித் ராம், ஆண்டனி தாஸ், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
வி.பி. காஞ்சி வீரன்ஸ் வீரர்கள்:
பாபா அபராஜித் (கேப்டன் ), ராஜகோபால் சதீஷ், சுரேஷ் லோகேஸ்வர் (விக்கெட் கீப்பர்), ஆர் சிலம்பரசன், சஞ்சய் யாதவ், விஷால் வைத்யா, எஸ் அருண், பி பிரான்சிஸ் ரோகின்ஸ், முகிலேஷ், என்எஸ் ஹரிஷ், ரங்கராஜ் சுதேஷ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா , முகிலேஷ் ஆகிய இருவரும் களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே வைத்யா ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.இதை தொடர்ந்து முகிலேஷ் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி 8 ஓவர் முடிவில் 44 ரன்கள் எடுத்து உள்ளது. தற்போது களத்தில் பாபா அபராஜித் 26 ரன்னும் , சுரேஷ் லோகேஸ்வர் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…