ஆர்.சி.பி அணியை விட்டு போகமாட்டேன் ! – கேப்டன் விராட் கோலி

ஜபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் தனது நண்பர் ஏபி டி வில்லியர்ஸுடன் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் 2016ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய அனுபவங்கள் பகிரந்துள்ளார். அப்போது அவர் ‘ ஆர்.சி.பி அணியுடன் விளையாடுவதும் சிறப்பாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.
ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே வாளையாடுவேன். என்ன நடந்தாலும் பெங்களூர் அணியை விட்டுப் போகமாட்டேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இதைக்கேட்ட பெங்களூர் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025