#IPL2020:டோனியின் கேப்டன்ஷிப்க்கு 4-மார்க் தான்!! சேவாக் பகீர்!

Published by
kavitha

ஐ.பி.எல்2020  கிரிக்கெட்டி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி விவகாரமாகி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் டோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியதாவது:

கடைசி ஓவரில் டோனி விளாசிய 3 சிக்சர் சென்னை இலக்கை நெருங்கியது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால்  உண்மை என்னவென்றால், டோனி நடுவில் இலக்கை விரட்ட கூட முயற்சிக்கவில்லை என்பது தான்.

Virender Sehwag Latest Photos And Wallpapers HD - Googlycricket.Net

இந்த சிக்ஸர்க்கு பதிலாக அவர் (முதல் 13 பந்தில் 10 ரன் எடுத்த டோனி அடுத்த 4 பந்தில் 19 ரன் சேர்த்தார்) பந்துகளை அடிக்காமல் விரயம் செய்ததே  எடுத்துக்காட்டு.தோனி முன்வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன்ரேட் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு வேளை அப்படி ரன்ரேட் குறையாமல் கடைசி ஓவரில் 20-22 ரன்கள் தேவையாக இருந்து, அந்த சமயத்தில் தோனி 3 சிக்சர் அடிக்கிறார் என்றால் வாவ் அதி அற்புதமான நிறைவு என மக்கள் பாராட்டி இருப்பார்கள்.

ஆனால் பீல்டிங்கின் போது கூட டோனியின் சில முடிவுகள் விசித்திரமாகவே இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, பியுஷ் சாவ்லா ரன்களை வாரி வழங்கிய நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் நான் 10க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் என்று கூறியுள்ளார்.
Published by
kavitha

Recent Posts

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

11 minutes ago

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

41 minutes ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

1 hour ago

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

10 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

11 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

13 hours ago