#IPL2020:டோனியின் கேப்டன்ஷிப்க்கு 4-மார்க் தான்!! சேவாக் பகீர்!
ஐ.பி.எல்2020 கிரிக்கெட்டி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி விவகாரமாகி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் டோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியதாவது:
கடைசி ஓவரில் டோனி விளாசிய 3 சிக்சர் சென்னை இலக்கை நெருங்கியது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் உண்மை என்னவென்றால், டோனி நடுவில் இலக்கை விரட்ட கூட முயற்சிக்கவில்லை என்பது தான்.
இந்த சிக்ஸர்க்கு பதிலாக அவர் (முதல் 13 பந்தில் 10 ரன் எடுத்த டோனி அடுத்த 4 பந்தில் 19 ரன் சேர்த்தார்) பந்துகளை அடிக்காமல் விரயம் செய்ததே எடுத்துக்காட்டு.தோனி முன்வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன்ரேட் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு வேளை அப்படி ரன்ரேட் குறையாமல் கடைசி ஓவரில் 20-22 ரன்கள் தேவையாக இருந்து, அந்த சமயத்தில் தோனி 3 சிக்சர் அடிக்கிறார் என்றால் வாவ் அதி அற்புதமான நிறைவு என மக்கள் பாராட்டி இருப்பார்கள்.