அந்த தருணத்தில் பிரியாவிடை…ஓய்வு குறித்து விராட் அதிரடி அறிவிப்பு

Default Image

தன்னுடைய 34 அல்லது 35 வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன்“ என்று விராட் கோலி ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் உடன் டெஸ்ட் போட்டிகளிலும் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.இதில் 5-0 என்று டி20 தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Image result for விராட் கோலி

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Image result for விராட் கோலி

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்  கேப்டன் விராட் கோலி அப்போது  அவரிடம் அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இதே உத்வேகத்துடன் தான் விளையாடுவேன். 2008ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன், வருடத்தில் 300 நாட்கள் கிரிக்கெட்டிற்காக நேரத்தை ஒதுக்கி கடினமான உழைப்புடன் விளையாடி வருகின்றேன்.

Image result for விராட் கோலி

அடுத்த 3 ஆண்டுகளுக்கு என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில்இப்போது இருக்கும் இதே உத்வேகத்தோடு  தன்னால் திறம்பட விளையாட முடியும்.தற்போது வரவுள்ள இரண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த விராட் தன்னுடைய 34 அல்லது 35 வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று ஓய்வு குறித்தும் கூறிவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்