ரன் குவிக்கும் ஆடுகளம்..ஆனால் நியூ..,சுருட்டி மடித்தோம்…ரசிகர்கள் மாஸ் விராட்..!பகிர்வு

Default Image
  • இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி20 முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி
  • இந்திய அணியின் கேப்டன் விராட் ஆட்டம் குறித்து பகிர்ந்த தகவல் இதோ

நியூஸிலாந்து எதிரான தொடரில் பங்கேற்க இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அவ்வாறு நடைபெற்ற முதல் டி 20 போட்டியை எதிர்கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியுள்ளது அதன்படி இந்திய அணி. 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி, 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு போட்டி குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, நாங்கள் தோல்வியடைந்து பின் அதற்கான காரணங்களை சொல்லி கொண்டிருப்பதை விட, போட்டியில் வெல்ல வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினோம் மைதானத்தில் 80 சதவீத இந்திய ரசிகர்கள் இருந்தனர் அவர்கள் எங்களை மேலும் உற்சாகப்படுத்தினர். 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும் போது ரசிகர்களின் ஆதரவு என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த போட்டியை அணி சிறப்பாக முடிக்க ரசிகர்களின் ஆதரவும் ஒரு மிகபெரிய காரணம் மேலும் மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. அதில் மொத்தம் வீசப்பட்ட 39 ஓவர்களில் 407 ரன்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வகையான ஆடுகளத்தில் பவுலர்களை யாரும் குறை சொல்ல முடியாது. நடுத்தர ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதே போல் எதிரணி 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தது போல நடந்தது தான் சிறப்பானது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்