எடுத்துக்கோ – வேகப்பந்து வீச்சாளர்களுக்காக கோலி , ரோகித் தியாகம்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரின் விமான பயணத்தில் தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கோலி, ரோஹித்,டிராவிட் ஆகியோர் விட்டுக்கொடுத்துள்ளனர்.
நாளை நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளும்,நாளை மறுநாள் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்காக அடிலெய்டு நகருக்கு செல்லும் விமான பயணத்தில் வேகவந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு தேவை என்ற காரணத்திற்காக, கால்களை நீட்டி அமரும் வகையிலான பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகளை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்காக கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விட்டுக் கொடுத்துள்ளனர.
ஐசிஐசியின் விதிகளின்படி ஒரு அணிக்கு 4 பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.