இன்ஸ்டாவிலும் அதிரடி காட்டிய கோலி..50 million..அதுளயும் முதல் இந்தியர்..பலே!!
இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லை கோலி படைத்துள்ளார்அவரை பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை(5 கோடி) எட்டி உள்ளது. 5 கோடி பலோவர்களை கொண்ட முதல் இந்தியர் என்றப் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கோலி.
https://www.instagram.com/p/B8lVzl3lLFX/
இந்திய அணியின் கேப்டனான் விராத் கோலி களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைக்க கூடியவர். விராட் கோலி என்றால் மிகவும் பிரபலம் என்பதால் அவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களும், கிரிக்கெட் விமர்களும், சக கிரிக்கெட் விரர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது சமூக வலைதளப்பக்கதில், போட்டிகள் குறித்த தனது கருத்து, புகைப்படங்களையும், தான் பயிற்சி செய்யக்கூடிய வீடியோ போன்றவைகளை பதிவிடுவது மட்டுமல்லாமல் தனது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவோடு சுற்றுலா செல்லும் படங்களையும் பதிவிடுவது வழக்கமாக கொண்டவர்.
இவர் பதிவிடும் போட்டோக்கள் டிரெண்ட் ஆக தவறியதில்லை.இந்நிலையில் தான்ஒரு புதிய மைல்கல்லாக இன்ஸ்டாகிராமில் தற்போது கோலியை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை(5 கோடி) எட்டி உள்ளது. இத்தகைய பெருமையை பெரும் முதல் இந்தியர் கோலி தான் .