விராட் ஒரு நல்ல வீரர், ஆனா அவரோடு ஒப்பிட வேண்டாம் -பாகிஸ்தான் வீரர் ரஸாக்

Published by
Venu
  • இந்திய அணி வீரர் பூம்ராவை குழந்தை பந்துவீச்சாளர் என்று அப்துல் ரசாக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
  • தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி குறித்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள்  நட்சத்திர ஆல் -ரவுண்டராக வர்ணிக்கப்படுபவர் அப்துல் ரசாக்.இவர் பாகிஸ்தான் அணியின் இவர் கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த 2013 -ஆம் ஆண்டு விளையாடினார். இந்த போட்டிதான் இவரது கடைசி சர்வதேச போட்டி ஆகும்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சில் கலக்கி வரும் இளம் வீரர் ஜஸ்பிரிட் பூம்ரா குறித்து அப்துல் ரசாக் கருத்து தெரிவித்தார்.அதாவது பூம்ரா ஒரு குழந்தை போல உள்ளார்.நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை  எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பூம்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

இவர் இவ்வாறு கூறியது இந்திய ரசிகர்கள் இடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.இவரது கருத்துக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இவர் கூறிய இந்த கருத்து ஓய்வதற்குள் தற்போது மீண்டும் ஒரு கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது உலகின் தற்போதைய காலகட்டத்தில் தலை சிறந்த வீரராக கருதப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,1992-ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர்கள் உலக தரம் வாய்ந்த வீரர்களாக இருந்தனர்.ஆனால் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அப்படி யாரும் இல்லை.காரணம் டி -20 போட்டிகள் மாற்றிவிட்டது.

ஆனால் விராட் கோலி மட்டும் சச்சினை போல நல்ல மதிப்பெண்களை பெற்றுவருகிறார்.ஆனால்  விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சச்சின் வேறு ,கோலி வேறு என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

29 minutes ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

30 minutes ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

37 minutes ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

1 hour ago

“மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.,” அன்புமணி ஆவேசம்!

டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…

1 hour ago

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

2 hours ago