விராட் கோலியின் கனவு பலித்தது !மீண்டும் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் உலகக்கோப்பை உடன் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்ப கால அவகாசம் கடந்த 30-ம் தேதி முடிந்தது.
புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் அன்ஷுமன் கொய்க்வாட் , சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் டாம் மூடி , மைக் ஹெஸன் ,கேரி கிர்ஸ்டன் ,ஜெயவர்த்தனே ,ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புத் ,ரவிசாஸ்திரி ஆகியோருக்கு இன்று காலை முதல் நேர்காணல் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் இறுதியாக கபில் தேவ் தலைமையில் அன்ஷுமன் கொய்க்வாட் , சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்து உள்ளது.
மேலும் ரவிசாஸ்திரி 2021-ம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என தேர்வு குழு தலைவர் கபில்தேவ் கூறினார். கேப்டன் கோலி தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தான் வேண்டும் என கூறி இருந்தார் அவரது கனவு பலித்து விட்டது.