‘இதயம் கரைக்கிறதே’…விராட் கோலி செய்த நெகிழ்ச்சி செயல்..இன்ப அதிர்ச்சியில் குட்டி ரசிகர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
![Virat Kohli young fans](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-young-fans.webp)
கட்டாக் : விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்களை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவரை போட்டியில் விளையாடும்போது ரசிகர்கள் பார்த்தார்களோ அல்லது வெளியில் அவர் எங்கும் செல்லும்போது பார்த்தாலோ உடனடியாக அவருடன் கை குலுக்கி புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுவதும் உண்டு. பல ரசிகர்களுடைய கனவு அவரை பார்ப்பதாகவும் இருந்து வருகிறது. ரசிகர்கள் கொடுக்கும் அன்பையும் விராட் கோலி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதை பார்த்திருக்கிறோம்.
இந்த சூழலில், மைதானத்தில் இருந்த குட்டி ரசிகர்களுக்கு விராட் கோலி கைகொடுக்க அதற்கு அந்த குட்டி ரசிகர் கொடுத்த ரியாக்சன் சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டு இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது விராட் கோலி பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, பவுண்டரிக்கு வெளியில் இரண்டு சிறுவர்கள் பால் பாய் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அந்த பகுதியில் பீல்டிங் செய்ய வந்த விராட் கோலியை பார்த்தவுடன் ஒரு சிறுவர் தனது கையை காட்டி விராட்கோலிக்கு கை கொடுத்தார். விராட் கோலியும் மகிழ்ச்சியான முகத்துடன் அவருக்கு கைகளை கொடுத்தார். உடனடியாக அந்த சிறுவன் முகத்தில் வந்த புன்னைகையை நாம் நம்மளுடைய வாயால் விவரிக்க முடியாடியது. ஏனென்றால், அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் இருந்தார்.
விராட் கோலி கையை கொடுத்தவுடன் அந்த குட்டி ரசிகர் தனது நெஞ்சில் கையை வைத்து கொண்டு மகிழ்ச்சியில் கீழே விழுந்தபடி ரியாக்சன் கொடுத்தார். இந்த வீடியோவையும், இதற்கு முன்பு படத்தில் ஷாருக்கான் இதேபோல கொடுத்த ரியாக்சனையும் வைத்து நெட்டிசன்கள் எடிட்டி செய்து வருகிறார்கள். அதற்கான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
wholesome 🥹❤️ pic.twitter.com/Cct7dPCtKf
— ` (@Lordshasfallen) February 9, 2025
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் இங்கிலாந்து 304 ரன்கள் ரன்கள் எடுத்தது. அடுத்ததாக, 305 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இறுதியில் 44.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !
February 11, 2025![PM Modi Meets Macron, JD Vance](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PM-Modi-Meets-Macron-JD-Vance.webp)
கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?
February 11, 2025![garudan vs vidaamuyarchi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/garudan-vs-vidaamuyarchi.webp)
INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?
February 11, 2025![rohit sharma sachin tendulkar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-sachin-tendulkar.webp)