விராட் கோலி : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் மோசமான பார்மில் விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த போட்டிகளில் விராட் கோலி பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ்-இல் சூப்பர் 8 சுற்று முழுவதும் நடைபெற இருக்கிறது. எனவே, விராட் கோலி அதில் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த சூழலில் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வருண் ஆரோன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அவரது ஆட்டம் குறித்து கேள்விகள் எழும்போதெல்லாம் விராட் கோலி அவருடைய பேட்டிங் மூலம் தான் பதில் அளிப்பார்.இந்த உலகக்கோப்பை தொடருக்கும் முன்பு ஐபிஎல் தொடரை பார்த்தால், அவரது ஸ்டிரைக் ரேட் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பபட்டது. அதன் பிறகு அசத்தலாக விளையாடி அனைத்திற்கும் பதில் அளித்தார்.
அதைப்போலவே, இந்த உலகக்கோப்பை தொடரிலும் வரும் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடி பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்து அமைதிப்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன். அப்போது தான் அவருடைய ஸ்டிரைக் ரேட்டைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். இப்போது அவர் முதல் 2 அல்லது 3 போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்று குறுகிறார்கள். ஆனால், இது போன்ற விக்கெட் கொண்ட பீச்களில் எந்த பேட்டருக்கும் இது நிகழலாம்.
எனவே, இதனை கண்டிப்பாக மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். வெஸ்ட் இண்டீஸுக்கு சென்று இருக்கும் விராட் கோலி வருகின்ற போட்டிகளில் அதிரடியாக விளையாடுவார். விராட் அத்தகைய விக்கெட்டுகளில் விளையாடும்போது வித்தியாசமான பேட்டராக இருப்பார்.விராட் கோலி எங்கு சென்றாலும் ரன்களை அடிப்பார் என்பது உண்மை.
விராட் கோலியின் மிகப்பெரிய பிளஸ் பாயின்ட் என்னவென்றால், அவர் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான விளையாட்டை விளையாடுவதில்லை. இடங்களுக்கு ஏற்ப மாற்றி விளையாட கூடிய நல்ல வீரர். அதுவே ஒரு சிறந்த பேட்டரின் மிகப்பெரிய அடையாளம்” எனவும் வருண் ஆரோன் கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…