சச்சின் மற்றும் லாரா கலந்த கலவை விராட் கோலி: ஷேன் வார்ன்!!
- லாரா, சச்சின் டெண்டுல்கரை விராட் கோஹ்லி நியாபகப்படுத்துகிறார் என மெக்ராத் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களாக பிரையன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கரை தனக்கு நியாபகப்படுத்துவதாக முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.