உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.இந்திய அணி தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது.இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் போதாது மற்ற வீர்ரகளிடம் இருந்து ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் , ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் ஆனால் அணியில் உள்ள அனைவரும் ஒத்துழைக்காமல் பெரிய அளவில் வெற்றி காண முடியாது.
ஒரு தனிப்பட்ட நபரின் திறமையால் மட்டுமே தொடரை வெல்ல முடியாது. மற்றவர்களின் ஒத்துழைப்பு முக்கியமான நேரத்தில் இல்லாவிட்டால் கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் 1996, 1999 மற்றும் 2003 -ம் ஆண்டு உலக கோப்பையில் தனக்கு ஏற்பட்ட சுமையை போல விராட் கோலிக்கும் ஏற்படும்.
நம்மிடம் சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் உள்ளார்கள். நம்பர் 4 என்பது வெறும் எண்கள் மட்டும் தான் வீரர்களை மாற்றி மாற்றி இறக்கிக் கொள்ளலாம் அது ஒரு முக்கியமான பிரச்சனை இல்லை.
4,6 மற்றும் 8 என எந்த இடங்களில் இருந்து இறக்கினால்நம்ம வீரர்கள் விளையாடுவார்கள். சூழ்நிலையை புரிந்து விளையாடுவது தான் முக்கியம் . நம்முடைய அணியில் 10 வருட அனுபவம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர்.
மேலும் குல்தீப்,சாஹல் , ஹர்திக் பாண்டியா ஆகிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள்.உலக கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…