நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் இருக்கும் ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கிடையில், இப்போட்டியில் பெங்களூரு அணி சுலபமாக வெற்றி பெற்றாலும், களத்தில் விராட் கோலியின் கடும் ஆக்ரோஷம் நிறைந்து இருந்தது.
இதனால் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், போட்டி முடிந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும் லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீரூம் பயங்கரமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள்.
லக்னோ அணியின் இன்னிங்ஸின் போது க்ருனால் பாண்டியாவின் கேட்சை விராட் கோலி பிடித்தார். கேட்சை பிடித்த பின் லக்னோ ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைராகி வருகிறது. கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மைதானத்திற்குள் வந்து பெங்களூர் ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “சத்தம் வரக்கூடாது” என செய்கை காட்டி இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது விராட் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்றய போட்டியில் ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி என அவருடைய ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் கம்பீர் ரசிகர்கள் விராட் கோலி செய்தது தவறு என மாற்றி மாற்றி கருத்துக்களில் மோதி வருகிறார்கள்.
மற்றோரு பக்கம் மைதானத்தில் வாக்கு வாதத்தில் இருவரும் ஈடுபட்டதால் கிரிக்கெட் நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இது தவறான செயல் என பதிவிட்டு வருகிறார்கள்.
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…